சமையல் எரிவாயு வெடிப்பு - 8 பேர் கொண்ட குழு நியமனம்

சமையல் எரிவாயு வெடிப்பு - 8 பேர் கொண்ட குழு நியமனம்

சமீப காலமாக நாட்டில் ஏற்படும் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 8 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக பேராசிரியர் சாந்த வல்பொலகே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளுடன் கூடிய அறிக்கையை விரைவில் கையளிக்குமாறு ஜனாதிபதி குறித்த குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.