250 கிலோ ஹெரோயினுடன் சிக்கிய படகு கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது!
இலங்கைக்கு தெற்கே 900 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் எல்லையில் 250 கிலோ ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட படகு இன்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கப்பலையும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களையும் பார்வையிட பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ணவும் பிரசன்னமாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் பணியகத்தினர், கடந்த சனிக்கிழமை முன்னெடுத்த சோதனையின் போது குறித்த ஹெரோயின் படகை கைப்பற்றியிருந்ததுடன், அதிலிருந்த ஆறு பாகிஸ்தான் மற்றும் ஈரானிய பிரஜைகளையும் கைது செய்தனர்.