5 கோடி ரூபாவுக்கு விற்பனையான கிரிக்கெட் மட்டை! யாருடையது தெரியுமா?

5 கோடி ரூபாவுக்கு விற்பனையான கிரிக்கெட் மட்டை! யாருடையது தெரியுமா?

சர் டொனால்ட் பிராட்மேன் பயன்படுத்திய கிரிக்கெட் மட்டை உலகின் மிக பெறுமதிவாய்ந்த கிரிக்கெட் மட்டையாக மாறியுள்ளது.

குறித்த கிரிக்கெட் மட்டை இணையத்தள ஏலத்தில் $245,500க்கு ஏலம் போயுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இலங்கை ரூபாய் மதிப்பின் படி, 5 கோடி ரூபாவை விட இது அதிகமாகும்.

1934 ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு இந்த கிரிக்கெட் மட்டையைப் சர் டொனால்ட் பிராட்மேன் பயன்படுத்தி இருந்தார்.

இந்த கிரிக்கெட் மட்டையின் பின்புறம் சர் டொனால்ட் பிராட்மேனின் குறிப்பு இருப்பது மற்றொரு சிறப்பு.

இதில் ஹெடிங்லியில் பெற்றுக் கொண்ட 304 ஓட்டங்களும் மற்றும் ஓவல் மைதானத்தில் பெற்றுக் கொண்ட 244 ஓட்டங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவே அவர் பெற்ற அதிகபட்ச ஒட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.