யாழ்ப்பாணம் - துன்னாலையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்தது

யாழ்ப்பாணம் - துன்னாலையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்தது

யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்ததால் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் ஒருவரது வீட்டிலேயே இன்று அதிகாலை இந்த சம்பவம் பதிவானது.

இந்த சம்பவத்தில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த விரைவுரையாளரின் மனைவி காயமடைந்துள்ளார்.

குறித்த அனர்த்தம் காரணமாக சமையலறையின் கூரைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.