33,000 லீற்றர் டீசலுடன் குடைசாய்ந்த தாங்கி ஊர்தி (படங்கள்)

33,000 லீற்றர் டீசலுடன் குடைசாய்ந்த தாங்கி ஊர்தி (படங்கள்)

சபுகஸ்கந்தவில் இருந்து கொட்டகலை பெற்றோலிய கூட்டுத்தாபன எண்ணெய் களஞ்சியத்துக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தியொன்று கினிகத்தேனை நகரில் உள்ள ஆடை தொழிற்சாலைக்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 5 மணியளவில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பகுதியில் இந்த தாங்கி ஊர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தாங்கி ஊர்தி கவிழ்ந்ததில் முன்பக்க ஆசனத்தில் சிக்கியிருந்த அதன் சாரதி மீட்கப்பட்டு கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தின் போது தாங்கியில் 33,000 லீற்றர் டீசல் இருந்ததாகவும், தாங்கியிலிருந்து சிறிதளவு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பிரதான வீதியின் ஒரு வழியில் குறுக்காக கவிழ்ந்த தாங்கி ஊர்தியிலிருந்து எரிபொருளை அகற்றி தாங்கி ஊர்தியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.