மூன்றாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 14 இலட்சத்தை அண்மித்துள்ளது
நாட்டில் நேற்றைய தினம் 41,470 பேருக்கு பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இதுவரையில் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 இலட்சத்து 8 ஆயிரத்து 22ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்றைய நாளில், 42,786 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், 188 பேருக்கு ஃபைசர் முதலாம் தடுப்பூசியும், 234 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அதேநேரம், 252 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 642 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.