எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

சமையல் எரிவாயு கொள்கலன்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணிகள் இன்று (13) ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்காக குறித்த குழு இன்று (13) பிற்பகல் கூடவுள்ளது.

நாளை மறுதினத்திற்குள் இந்த அறிக்கை பூர்த்தி செய்யப்படவுள்ள நிலையில், இந்த வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக அதன் உறுப்பினர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

சமையல் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பலகேவின் தலைமையிலான நிபுணர் குழு ஒன்று ஜனாதிபதியினால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவானது முன்னதாக வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் ஆய்வினை மேற்கொண்டிருந்ததுடன், சாட்சியங்களையும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.