முல்லைத்தீவு கடற்பரப்பில் சிவப்புக் கொடி!
முல்லைத்தீவு கடற்பகுதியில் பாதுகாப்பற்ற பகுதிகளில் நீராடுவதற்கு தடை விதித்து சிவப்பு நிற கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
காவல்துறை, கடற்படை மற்றும் பிரதேச மீனவர்கள் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மையில் முல்லைத்தீவு கடற்பகுதியில் நீராட சென்ற நிலையில் வவுனியாவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
குறித்த சம்பவத்திற்கு பின்னர் இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் செப்டம்பர் முதல் ஜனவரி வரையில் முல்லைத்தீவு கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் நிலையில், குறித்த பகுதியில் நீராடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதேச மீனவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.