
300 கிலோ கிராம் நிறையுடைய ஆமையுடன் இளைஞன் கைது
300 கிலோகிராம் நிறையுடைய ஆமையை பிடித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று நாவாந்துறையினை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.