நான் 40 கதையெல்லாம் கேட்கவில்லை! வெடித்த பிரச்சினைக்கு உருக்கமாக பேசிய குக்வித் கோமாளி அஸ்வின் குமார்!

நான் 40 கதையெல்லாம் கேட்கவில்லை! வெடித்த பிரச்சினைக்கு உருக்கமாக பேசிய குக்வித் கோமாளி அஸ்வின் குமார்!

குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் அடைந்தவர் தான் அஸ்வின் குமார். அதன் பின்னர் அவர் நடித்த பல ஆல்பம் பாடல்கள் தொடர்ந்து ஹிட் அடித்தது. தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வரும் இவர், ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள, என்ன சொல்லப் போகிறாய், எனும் திரைப்படத்தில் அஸ்வின்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ விழாவில் நேற்று நடைப்பெற்றது அப்போது பேசிய அஸ்வின் குமார் இதுவரை யாரும் பேசாத அளவுக்கு திமிர் பேச்சாக பேசியதால் அனைவருமே வாயடைத்துபோய் உள்ளனர்.

ரசிகர்களின் அன்பால் தான் நான் இங்கு வளர்ந்து இருக்கேன். விஜய் டிவி எனக்கு வாழ்க்கையில் திருப்பத்தை கொடுத்து இருக்கிறது,. ஒரு காமெடி நிகழ்ச்சியானது எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பை கொடுக்கும் என நினைக்கவில்லை.

நான், இதுவரை 40 கதைகளைக் கேட்டு தூங்கி இருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்றால் அது என்ன சொல்ல போகிறாய் மட்டுமே. ஏனெனில், இப்படத்தின் இயக்குனர் ஹரிஹரன் இக்கதையை அவ்வளவு சிறப்பாக கொண்டு செல்கிறார்.

எனவே இப்படத்தை நீங்களும் கண்டு கொண்டாடுவதை காண ஆவலாக இருப்பதாகவும் இப்படம் நிச்சயம் ஜெயிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்து அஸ்வின் பேசியுள்ளார். இந்த ஆடியோ விழாவில், அஸ்வின் பேசிய அனைத்து பேச்சுக்களும் மற்றும் தோரணைகளுமே வித்தியாசமாக காணப்பட்டது.

இதனால், நெட்டிசன்கள் பலரும் திட்டிதீர்த்து மீம்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர். 40 கதையை கேட்டு தூங்குவது என்பது, இயக்குனர்களை அவமதிக்கும் விஷயம் அதை சாதரணமாக பேசி இருக்கிறார் அஸ்வின்.

முதல் படமே இப்போது தான் வெளியாகிறது அதுக்குள் இப்படியா என விளாசி வருகின்றனர். மேலும், அஸ்வினின் பேச்சு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது இதனால் மனமுடைந்து அஸ்வின் இதுகுறித்து தற்போது விளக்கமளித்து இருக்கிறார்.

அதில், இது எனது முதல் மேடை பேச்சு என்பதால் நான் பதற்றமாக இருந்தேன். நான் எந்த பேச்சையும் தயார் செய்து விட்டு வரவில்லை. என் ரசிகர்களின் அன்பினால் நான் முற்றிலும் அதையெல்லாம் மறந்து போய்விட்டேன்.

எனக்கு கதை சொன்ன எந்த இயக்குனர்களையும் நான் அவமதிக்கவில்லை. என்னுடைய பேச்சு இந்த அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை பற்றி நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

என்னுடன் இருந்தவர்களுக்கு மட்டுமெ தான் தெரியும் நான் எந்த அர்த்தத்தில் பேசினேன் என்பது. அன்று நான் என்னன்னமோ உளர்றேன். என்ன பேசுறதுன்னே தெரியவில்லை. 

அந்த பின்னணியில் இருக்கும் உணர்ச்சிகளையும் நான் புரிந்துகொள்கிறேன் இது தற்செயலாகவே நடந்தது. மேலும், நான் 40 கதை கேட்டுவிட்டேன் என எண்ணை மிகைப்படுத்தி கூறிவிட்டேன்.

இதுவரை 40 கதைகள் எல்லாம் கேட்கவில்லை. நண்பர்களிடம் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது ஒரு குத்துமதிப்பாக பேசுவதுபோல் பேசிவிட்டேன். மேடையில் முழு சுதந்திரமாக பேசுவதை நான் எடுத்திருக்ககூடாது.

இந்த பேச்சால் நான் குறிவைக்கப்பட்டது போல் உணர்கிறேன். நான் படங்களை நிராகரித்த சிலரால் வெறுப்பு ஆளாகி இருக்கிறேன். இது அவமரியாதைக்காக அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், டைரக்டர் ஹரி ஹரனும் தன் பேச்சை தயார் செய்து பேசவில்லை, நண்பர்கள் குழுவாகவே பேசினோம்.

சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒரே ஒருவர் மட்டும்தான். அது யார் என நமக்கே தெரியும். என கூறியிருக்கிறார். நான் இன்னும் சினிமாவில் சாதிக்கவே இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி ஆணவத்தில் பேசியிருப்பேன்? அப்படியே, சாதிச்சாலும் எனக்கு ஆணவம்ங்கிறது எப்பவுமே வர்றாது. நான் திமிர் பிடித்தவனும் இல்லை என தெரிவித்துள்ளார்.