7 மூடைகளில் மிதந்து வந்த 275 கிலோ கஞ்சா

7 மூடைகளில் மிதந்து வந்த 275 கிலோ கஞ்சா

யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவினையும் கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு எடுத்து வந்துள்ளனர்.