மனநிலை பாதிக்கப்பட்டவரை மோதிய லொறி

மனநிலை பாதிக்கப்பட்டவரை மோதிய லொறி

சிலாபம் - குருநாகல் வீதியின் பிங்கிரிய பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சிலாபத்தில் இருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த லொறியொன்று, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக பிங்கிரிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.