LPL அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது

LPL அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது

லங்கா பிரீமியர் போட்டித் தொடர் இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டித் தொடரை கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்காக அனுமதிப்பத்திரத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

காலை 9 மணி முதல் 5 மணி வரையில் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இணைய தளத்தின் ஊடாக முன்பதிவு செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.