முகம்சுழிக்கும் ஆடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

முகம்சுழிக்கும் ஆடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அனைத்து படங்களும் வெற்றி பெற்றதால், தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

இவர் நடிப்பில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதுடன், இப்படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடித்துள்ளார் சமந்தா.

மேலும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சையினை சந்தித்து வருகின்றார். சமீபத்தில் தனது காதல் கணவரை பிரிந்த நிலையில், சோர்ந்து போகாத சமந்தா தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தினை வெளியிட்டு வரும் சமந்தா தற்போதும் கொசுவலை போன்ற உடையினை அணிந்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் உங்களுக்கு வேற உடை கிடைக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.