வனிந்து அசரங்க அசத்தல் சாதனை!

வனிந்து அசரங்க அசத்தல் சாதனை!

டி10 கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாளராக இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க மாறியுள்ளார்.

அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 லீக் போட்டியில் நேற்று இடம்பெற்ற பங்களா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அபுதாபி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களா டைகர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டொம் கொலர் 39 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 12 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 96 ஓட்டங்களை குவித்தார்.

எண்ரு ரசல் 26 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.

141 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களா டைகர்ஸ் அணி 8. 3 ஓவர்களில் 78 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பங்களா டைகர்ஸ் அணி சார்பில் வனிந்து ஹசரங்க 2 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவரது இரண்டாவது ஓவரில் எவ்வித ஓட்டங்களும் பெற்றுக் கொடுக்கப்படாத நிலையில் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

வனிந்து ஹசரங்க தற்போது 18 விக்கெட்டுகளுடன் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் உள்ளார்.

அபுதாபி T10 போட்டி வரலாற்றில் ஒரு வீரரின் சிறந்த பந்துவீச்சு சாதனையையும் வனிந்து நேற்று முறியடித்தார்.