இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதனடிப்படையில் போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியின் சரித் அசலங்க தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார்.

முதல் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.