17.50 ரூபாவினால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

17.50 ரூபாவினால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

செரண்டிப் நிறுவனமும் கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 17.50 ரூபாவினால்அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாக பிரீமா நிறுவனம் அறிவித்திருந்தது.

அவர்களும் கோதுமை மா ஒரு கிலோவிற்கான விலை 17.50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.