இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கான செய்தி

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கான செய்தி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (29) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

எனினும் தற்போது அப்பகுதியில் மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதனால் நாணய சுழற்சி தாமதமாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதல் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.