கிண்ணியா விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கிண்ணியா விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த எஸ்.நிபா (06 வயது) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலத்தினை உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதோடு, விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய, குறித்த படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.