கொவிட் பரவல் அதிகரிப்பு - இராணுவத் தளபதி அறிவிப்பு

கொவிட் பரவல் அதிகரிப்பு - இராணுவத் தளபதி அறிவிப்பு

நாட்டில் இன்றைய தினம் மேலும் 529 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 559,605 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,232 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 528,400ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.