படகு விபத்து - கிண்ணியா மேயர் விளக்கமறியலில்...

படகு விபத்து - கிண்ணியா மேயர் விளக்கமறியலில்...

திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாங்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர மேயர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான மேயர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று முன்தினம் (23) மிதப்பு பாதை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததுடன் இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்..

சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.