வெடிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள்? - காரணம் இதோ!

வெடிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள்? - காரணம் இதோ!

வாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களாலேயே அண்மைக்காலமாக எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருவதாக சமூகத்தில் பரவி வரும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானது என அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் இன்று (25) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 20ஆம் திகதி கொழும்பு பந்தய மைதானத்திற்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தீ பரவியமை, உணவகத்தினுள் ஏற்பட்ட திரவ பெட்ரோலிய வாயு கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் எல்.பி எரிவாயு விபத்துக்கள் சிலிண்டர் வெடிப்புக்களாக குறிப்பிடப்பட்ட போதும் அண்மையக் காலமாக எல்.பி எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பினால் ஏற்பட்ட விபத்துக்கள் ஏதும் பதிவாகவில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

எல்.பி. எரிவாயு தொடர்பில் நுகர்வோரின் அறியாமை மற்றும் பல்வேறு முறையற்ற பயன்பாடுகளால் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.