குடும்ப தகராறில் மனைவி உயிரிழப்பு! சந்தேகத்தில் கணவன் கைது!!

குடும்ப தகராறில் மனைவி உயிரிழப்பு! சந்தேகத்தில் கணவன் கைது!!

தீக் காயங்களுக்குள்ளான குடும்பப் பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை – திக்கம் அல்வாய் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பரமநாதன் சசிகலா (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 13ஆம் திகதி மதுபோதையில், வீட்டுக்கு வந்த கணவன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த குடும்பப் பெண் மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.

இதன்போது, கணவன் தன்னிடமிருந்த லைற்றர் மூலம் பாவடையில் தீ வைத்துள்ளார். தொடர்ந்து மனைவி தீயில் எரிந்துள்ளார்.

அயலவர்கள் போராடி, தீயை அணைத்து அவரை காப்பாற்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். சிகிச்சையிலிருந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கணவனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.