பிக்பாஸிலிருந்து வெளியேறிய இலங்கை பெண் அடித்த லூட்டி: யாரை சந்தித்திருக்கிறார் தெரியுமா?

பிக்பாஸிலிருந்து வெளியேறிய இலங்கை பெண் அடித்த லூட்டி: யாரை சந்தித்திருக்கிறார் தெரியுமா?

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இலங்கை பெண் மதுமிதா, அதற்கு முன்பு வெளியேறிய சுருதி இருவரும் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் அதிரடியாக உள்ளே சென்றுள்ளார் அபிஷேக். அடுத்தடுத்த நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் களைகட்ட தொடங்கிவிடும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இரு வாரத்திற்கு முன்பு வெளியேறிய நடிகை சுருதி, திருநங்கை நமீதாவை சந்தித்து பிறந்தநாள் பரிசு வாங்கிய நிலையில், தற்போது மதுமிதாவையும் சந்தித்துள்ளார்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெர்மனியை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் மதுமிதாவுடன் சுருதி ரீயூனியன் நடத்தியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இருவரும் இணைந்து செல்ஃபி எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளனர்.

பிரியங்கா சொன்னது போல அவர் வரும் வரை மதுமிதா ஜெர்மனிக்கு கிளம்ப போவதில்லையா? என அந்த புகைப்படத்தை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.