அயல் வீட்டாருடன் தகராறு முற்றி, வாள் வெட்டில் முடிந்தது!
யாழ்.சுன்னாகம் – அம்பனை பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இச்சம்பவம் நேற்றய தினம் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
முன்னதாக அயல் வீட்டாருடனான தகராறு ஏற்பட்டுள்ளது. அது முற்றியதில் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கானவர் 55 வயதுடைய குடும்பஸ்தர் எனத் தெரிவருகின்றது. இவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.