பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை குழந்தை பிறந்தது - குவியும் புகைப்படத்திற்கு வாழ்த்துக்கள்
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரினா ஆசாத் குழந்தை பிறந்துள்ள தகவலை அவர் வெளியிட்டு இருக்கிறார். பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் பெரிய வரவேற்பை பெற்ற சீரியலாகும்.
இந்த சீரியலில் டாக்டர் வெண்பா என்ற கேரக்டரில், நடிகை ஃபரினா ஆசாத் நடித்து வருகிறார். இவரின் வில்லத்தனமான நடிப்பு இந்த சீரியலுக்கு பெரிய வரவேற்பை பெறுகிறது.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர், சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், தற்போது தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
தற்போது ஃபரீனாவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.