உலகிலேயே மிகவும் விலையர்ந்த உணவுகள் இதுதானாம்!

உலகிலேயே மிகவும் விலையர்ந்த உணவுகள் இதுதானாம்!

பொதுவாக உணவு வகைகள் பல ஊர்களில் தனி தனி ஸ்பெஷலாக கிடைக்கும். அவை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்பதிவில் உலகில் மிக விலையுர்ந்த உணவுகளை பற்றி தெரிந்துகொள்ளப்போகிறோம்.

ஸ்டில்ட் ஃபிஷெர்மன் இன்டல்ஜன்ஸ்( stilt fisherman indulgence)

இலங்கையில், தி ஃபோர்ட்ரெஸ் ஹோட்டல் என்ற ஹோட்டலில், தயாரிக்கப்படும் இந்த உணவின் விலை சுமார் ரூ. 10 லட்சத்து 60 ஆயிரம்,.

இவை இலங்கையில் பிரத்யேக மீன்பிடி முறையான ஸ்டில்ட் ஃபிஷ்ஷிங் செய்யும் மீனவர்களின் உருவம் மற்றும் உயர்ரக சாக்லேட் கொண்டு செய்யப்படும் டெஸெர்ட் உணவு இது.

மேலும், இதில் இத்தாலியன் கஸாட்டா எனும் இனிப்பு வகை, ஐரிஷ் பெய்லி கிரீம் எனும் மதுபான வகை மற்றும் மாம்பழம், மாதுளை பழங்களால் தயாரிக்கப்பட்ட கம்போட் எனும் பிரெஞ்சு இனிப்பு ஆகியவை சேர்த்து இந்த டெஸெர்ட் உணவு தயாரிக்கப்படுகிறது.

இதன் மீது இறுதி அலங்காரமாக தங்க இதழ்கள் தூவப்படுகின்றன. இவற்றோடு வாடிக்கையாளர் எடுத்துச் செல்ல 80 காரட் நீலக்கல் அலங்காரமாக வைக்கப்படுகிறது.

 

ராயல் பிரியாணி (ROYAL BIRIYANI)

பாம்பே பர்ரோ உணவகத்தில் கிடைக்கும் இந்த பிரியாணியின் விலை மட்டுமே சுமார் 20 ஆயிரம் ரூபாயாம். இந்த பிரியாணியில், 23 காரட் சாப்பிடக் கூடிய தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரியாணியுடன் காஷ்மீர் ஆட்டு கபாப், பழைய டெல்லி ஆட்டுக்கறி, ராஜ்புத் சிக்கன் கபாப், மொகாலி கோப்தாஸ், மற்றும் மலாய் சிக்கன் ஆகியவையும் வழங்கப்படுகிறதாம்.

லிண்ட் ஹொவி சாக்லேட் புட்டிங் (Lindeth Howe Pudding)

இங்கிலாந்தில், லிண்டெத் ஹொவி ஹோட்டல் என்ற இடத்தில் கிடைக்கும் இந்த சாக்லெட் ஆனது, விலை மட்டுமே சுமார் ரூ. 25 லட்சத்து 36 ஆயிரமாம்.

இந்த உணவில், பெல்ஜியம் நாட்டின் சிறந்த வகையான சாக்லேட், விலையுயர்ந்த ஷாம்பெய்ன் ஜெல்லி, காவியர் (caviar), இவற்றோடு தங்க இதழ்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், செர்ரிக்குப் பதிலாக 2 காரட் வைரம் வைத்து அலங்கரிக்கப்பட்டது. 2 வாரங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தால் மட்டுமே கிடைக்கும்.

டாகோ (DOGO)

மெக்ஸிகோ நாட்டில் உள்ள கிராண்ட் விலாஸ் லாஸ் காபோஸ் என்ற இடத்தில் கிடைக்க இந்த உணவு சுமார் ரூ. 18 லட்சத்து 11 ஆயிரம் உடையதாம்.

இந்த பிரட் உணவில், தங்க இதழ்கள் மற்றும் சோளம் கலந்து செய்யப்பட்ட டோர்டில்லா எனப்படும் ஒருவகை பிரட். மேலும், இந்த உணவில் உலகின் விலையுயர்ந்த ஜப்பானிய கோப் மாட்டிறைச்சி, லாப்ஸ்டர் இறால், பிளாக் ட்ரஃபிள் சீஸ், அல்மாஸ் பெலூகா காவியர் எனும் அரிய வகை மீன் முட்டை உலகின் மிக விலை உயர்ந்த உணவு பொருள்.

இந்த காவியர் மட்டுமே ஒரு கிலோகிராம் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ளது. இதற்கு பயன்படுத்தப்படும் சாஸ் தயாரிக்க மிகவும் அதிக விலையுள்ள மிளகாய், உலகின் விலை உயர்ந்த டக்கீலா மற்றும் உலகின் அதிக விலையுடைய கோபி லுவாக் காபி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

வின்ஸ்டன் காக்டெய்ல் (WINSTON COCKTAILS)

ஆஸ்திரேலியாவில், உள்ள கிளப் 23, மெல்போர்ன் இடத்தில் கிடைக்கும் உலகின் மிக விலையுயர்ந்த மதுபானம் என கின்னஸ் சாதனை படைத்தது இந்தப் பானம்.

சுமார் ரூ. 8 லட்சத்து 81 ஆயிரம் விலையாம். குளிரூட்டப்பட்ட க்ரே கூஸ் வோட்காவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கப்பட்டது. இதன் விலைக்கு அதிக காரணம், மிகவும் விலையுயர்ந்த ஒரு காரட் வைரம் உங்கள் கோப்பையின் அடியில் கிடைக்கும்.

மேலும், நீங்கள் அருந்தும்போது, 'டைமண்ட் இஸ் ஃபாரெவர்' பாடல் பின்னணியில் லைவ் குழுவினரால் வாசிக்கப்படுமாம்.... என்ன அடுத்து ஒரு முறை வாழ்வில் ருசிக்க நீங்க ரெடியா..