நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணி

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் அணி நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்காக டிசம்பர் மாத இறுதியில் பங்களாதேஷ் அணி நியூசிலாந்துக்கு பயணிக்கவுள்ளது.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையில் முதலாவது டெஸ்ட் போட்டியும், ஜனவரி 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் இடம்பெறவுள்ளன.

இந்தத் தொடர் இரண்டு அணிகளுக்கும் 2021- 2023 ஆண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடருடன் இணைந்ததாக அமையவுள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டு மே மாதம் இடம்பெறவிருந்த அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகள் அடங்கிய தொடர், அடுத்த ஆண்டு மே மாதம் இடம்பெறும் என்று பங்களாதேஷ் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

ஆயினும் ஏலவே திட்டமிடப்பட்டவாறு அன்றி, 3 ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே பங்களாதேஷ் பங்கேற்கவுள்ளது.

ஏனைய உள்ளுர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அயர்லாந்து அணிக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட 4, இருபதுக்கு20 போட்டிகளை எதிர்வரும் 2023ஆம் ஆண்டில் பொருத்தமான காலப்பகுதியில் விளையாடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அயர்லாந்துடனான தொடருக்கு முன்னதாக இலங்கை அணியுடனான தொடரிலும் பங்களாதேஷ் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.