
20 ஓவர் போட்டி: கேப்டன் பதவிக்கு ரோகித்சர்மா சிறந்தவர் - கவாஸ்கர்
20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா பொறுத்தமானவர் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி பதவி விலகியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் 20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா பொறுத்தமானவர் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
20 ஓவர் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா சிறந்தவர். அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் 10 முதல் 12 மாதங்களே உள்ளன. ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியை சிறப்பாக வழி நடத்தியுள்ளார். எனவே ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு கொடுத்தது சரியே.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.