11 மாவட்டங்களுக்கான மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிப்பு!

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிப்பு!

நாட்டில் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கம்பஹா, கேகாலை, குருணாகல், மாத்தளை, இரத்தினபுரி, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.