எல்பிஎல் அணித்தெரிவில் இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் புறக்கணிப்பு

எல்பிஎல் அணித்தெரிவில் இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் புறக்கணிப்பு

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தெரிவில் எஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, மினோத் பானுக, பிரவின் ஜெயவிக்ரம, சதீர சமரவிக்ரம ஆகியோர் தெரிவு செய்யப்படவில்லை.

அதற்குப் பதிலாக ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் உள்ளூர் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வீரர்கள் தேர்வுக்கு முன்னதாக, உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கியிருந்தது.

எவ்வாறாயினும், இம்முறை எல்பிஎல் வீரர்கள் தெரிவில் அவர்களில் ஒரு சிலரே இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

எவ்வாறாயினும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது ஒழுக்கத்தை மீறியமைக்காக இடைநிறுத்தப்பட்ட தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு இவ்வருடம் எல்பிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.