எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேல் மாகாணத்தில் கடுமையாக அமுலுக்கு வரும் சட்டம்
மேல் மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழித்தட சட்டம் மீண்டும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் பேருந்துகளுக்கு பிரதான முன்னுரிமை வழித்தட முறைமையானது மொறட்டுவையில் இருந்து புறக்கோட்டை வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளது.
இந்த நடைமுறை சரியான முறையில் பின்பற்றபடுகிறதா என்பதை கண்காணிக்க போக்குவரத்து பொலிஸாருக்கு மேலதிகமாக மேலும் 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.