கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாகக் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளைகளுக்கும் நாளை (10) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடும் மழை காரணமாக யாழ் மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும், மன்னார் மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க மாவட்ட அரசாங்க அதிபர்கள் தீர்மானித்தனர்.

இந்நிலையில், வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கும் பொறுப்பு மாகாண ஆளுநரின் அங்கீகாரத்துடன், அம்மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.