இந்திய அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றி

இந்திய அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றி

இருபதுக்கு20 உலகக்கிண்ண தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக டேவிட் வைஸ் 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 16 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 133 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 15.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக ரோஹித் சர்மா 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் நமீபியா அணியின் ஜோன் ஃப்ரைலின்க் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.