இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றிருந்த இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணி இன்று (06) காலை நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு செல்ல தவறியிருந்த இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான, தமது இறுதிப்போட்டியில் பெற்ற வெற்றியோடு இடைநடுவே தொடரிலிருந்து வெளியேறியிருந்தது.