பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய ஏனைய தரப்பினருக்கு எதிர்காலத்தில் பூஸ்டர் தடுப்பூசி!

பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய ஏனைய தரப்பினருக்கு எதிர்காலத்தில் பூஸ்டர் தடுப்பூசி!

பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய ஏனைய தரப்பினருக்கு எதிர்காலத்தில் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார பணிக்குழாமினர் உள்ளிட்ட முன்னிலை சேவையாளர்களுக்கு இன்று (01) முதல் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி செலுத்தப்படுகின்றது.

கொவிட் - 19 இரண்டாம் தடுப்பூசி பெற்றுக் கொண்ட தினத்திலிருந்து 6 மாதங்களின் பின்னர், இந்த செயலூக்கி செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை ஒரு கோடியே 34 இலட்சத்து 60 ஆயிரத்து 92 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டுள்ளதாகக் கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.