தென் ஆபிரிக்க அணிக்கு 143 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

தென் ஆபிரிக்க அணிக்கு 143 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

உலகக்கிண்ண இருபதுக்கு20 தொடரின் 25ஆவது போட்டியில் தென் ஆபிரிக்க அணிக்கு 143 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக பெத்தும் நிஸங்க 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் டப்ரைஸ் ஷம்சி 17 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், தென் ஆபிரிக்க அணி 143 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.