தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியை வென்றது
2021 இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரின் 25 ஆவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.
அதற்கமைய, சார்ஜாவில் இடம்பெறவுள்ள இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, தென் ஆபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்து இலங்கையை முதலில் துடுப்பாட அழைத்தது.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கடந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியுடன் மோதிய அதே வீரர்களே இன்றும் தென் ஆபிரிக்காவுடன் விளையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது