எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவுநாள் இன்று!
இசைச் சக்கரவர்த்தி என தமிழக அரசால் கௌரவிக்கப்பட்ட எம்.எஸ் விஸ்வநாதனின் ஐந்தாவது ஆண்டு நினைவஞ்சலி இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.
நடிகனாக வேண்டும் என்ற இலட்சியத்தோடு சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த எம்.எஸ் விஸ்வநாதன் அந்த முயற்சி தோல்வியை தழுவ ஒரு விபத்தாகவே இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சுமார் 700க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மெட்டமைத்து தமிழக இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்ட இவர் 200 இற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அத்துடன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள இவர் பிற்காலத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு தமிழ் திரையுலகில் நீங்கா இடம்பிடித்துள்ள எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த 2015 ஆண்டு இதேநாளில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.