காத்தான்குடி வாகன விபத்தில் ஒருவர் பலி : மற்றொருவர் காயம்

காத்தான்குடி வாகன விபத்தில் ஒருவர் பலி : மற்றொருவர் காயம்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் காத்தான்குடி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியொன்றும் மகிழுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று(28) அதிகாலை இடம்பெற்ற இந்த வாகன விபத்தில், உந்துருளியில் பயணித்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.