எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார் - ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார் - ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி

நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தற்போது மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தேர்தல் தொகுதிகள் ஊடாக போட்டியிடும் வேட்பாளர் தெரிவு இடம்பெறுகிறது.

நேர்முகத் தேர்வின் ஊடாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.