வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்ட குடியிருப்புகளுக்கு தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக  இன்று (செவ்வாய்க்கிழமை), நோர்வூட், கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவ, பண்டாரவளை, பதுளை ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது.

தபால் ஊழியர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களிடம் விநியோகித்து வருகின்றனர்.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.