பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 331பேர் கைது
மேல்மாகாணத்தில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 331 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு, நேற்று (திங்கட்கிழமை) மாலை 6 மணி முதல் தொடங்கி இன்று அதிகாலை 5 மணி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் அதிகளவானோர், ஹெரோய்ன் போதைப்பொருளுடனே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சட்டவிரோத மதுபானம் தொடர்பாக 92 பேரும், கஞ்சா வைத்திருந்த 72 பேரும் கோடா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 16 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.