வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் பிரிந்த உயிர்
யாழ்.வடமராட்சி நேற்றிரவு கப்புது வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது தாயாரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவசர ஆம்புலன்ஸ் சேவை ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணகளை நெல்லியடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.