திருகோணமலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை – நிலாவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நிலாவெளி 7 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மொஹிதீன் தௌபீக் (48 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து நிலாவெளி பகுதியை நோக்கி பயணித்த லொறி, முச்சக்கர வண்டியுடன் மோதுண்டதுடன், முச்சக்கர வண்டி எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ள நிலாவெளி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.