தடுப்பூசி வேலைத்திட்டம் - தொற்று நோயியல் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை!

தடுப்பூசி வேலைத்திட்டம் - தொற்று நோயியல் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை!

கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 49 இலட்சத்து 28 ஆயிரத்து 248 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதேபோல், ஒரு கோடியே 30 இலட்சத்து 38 ஆயிரத்து 469 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினத்தில் (22) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - 6,672

சைனோபார்ம் முதலாவது டோஸ் - 5,613
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் -96,227

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் - 53,632
ஃபைசர் இரண்டாவது டோஸ் - 559

மொடர்னா முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் - 885

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.