பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட சோகம்!

பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட சோகம்!

கஹவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்மடுல்ல - நோனாகம வீதியின் எல்லேகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

ரக்குவானை பிரதேசத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது குறித்த பேருந்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

34 வயதுடைய ஹுலங்தாவ, மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கலென்பிந்துனுவெவ - உபுல்தெணிய வீதியின் கலென்பிந்துனுவெவ நகருக்கு அருகில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் குறுக்காக வெட்டப்பட்டிருந்த குழியொன்றில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த 40 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்