கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலைய விவகாரம்: ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் மனு!

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலைய விவகாரம்: ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் மனு!

கெரவலப்பிட்டிய திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) மின்னுற்பத்தி நிலையத்தின் 40 % பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சரவையின் மேற்படி தீர்மானத்தை சட்ட வலுவற்றதாக்குமாறு கோரி அண்மையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வண. எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தனர். 

அமைச்சரவையில் கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குறித்த தீர்மானத்தை, மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில் வலுவற்றதாக்க உத்தரவிடுமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.