பாடசாலைக்கு சமுகளிக்காத ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத கொடுப்பனவை வழங்காதிருக்க வடமேல் ஆளுநர் தீர்மானம்
வடமேல் மாகாணத்தில் நாளை (21) மற்றும் நாளை மறுதினங்களில்(22) பாடசாலைக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையினை தமக்கு வழங்குமாறு அந்த மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே பணிப்புரை விடுத்துள்ளார்.
மாகாண வலய கல்வி பணிப்பாளர்களுக்கு அவர் இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையின் பிரகாரம், பாடசாலைக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களின் நவம்பர் மாத கொடுப்பனவை வழங்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே குறிப்பிட்டுள்ளார்.