வாழ்க்கையில் பிரச்சனையே வராமல் இருக்க வேண்டுமா? இந்த இடங்களில் அமைதியாக இருங்கள்...

சில நேரங்களில் நாம் அதிகமாக பேசுவது நமக்கே மோசமான சூழ்நிலைக்கு தள்ளலாம் அல்லது மற்றவர்களிடையே நம்முடைய மதிப்பு குறைந்தும் போகலாம். எல்லா சூழ்நிலைகளிலும் நாம் அளவறிந்து பேசுவது தான் சரியாக இருக்கும்.

நம் எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்துகள் உள்ளன. அதை அனைவரும் கேட்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். சில நேரங்களில் நாம் அதிகமாக பேசுவது நமக்கே மோசமான சூழ்நிலைக்கு தள்ளலாம் அல்லது மற்றவர்களிடையே நம்முடைய மதிப்பு குறைந்தும் போகலாம். எல்லா சூழ்நிலைகளிலும் நாம் அளவறிந்து பேசுவது தான் சரியாக இருக்கும். எந்தெந்த நேரங்களில் பேசக்கூடாது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

2/ 8

 கிண்டல் செய்யும் போது : நாம் தவறு செய்யும் போது, மற்றவர்கள் அதனை கேலி கிண்டல்கள் செய்வார்கள். சில சமயங்களில் நாம் செய்த தவறை அவர்கள் மறந்துவிட்டால், நாம் உடனே நம் வாயை மூடிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மீண்டும் ஒரு பிரச்சினை இதனால் வரக்கூடும். பிரச்சினைகளை தவிர்ப்பதே சிறந்த வழி ஆகும்.

3/ 8

 அமைதி : யாராவது உங்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் அல்லது கூடுதலான தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சம்பந்தப்பட்ட அந்த நபரை பார்த்து கொண்டே சில நேரம் அமைதியாக இருங்கள். அவரே உங்களிடம் வந்து அந்த தகவல்களை சொல்லுவார். அவசரப்பட்டு நீங்கள் கேட்டு அவர் கூறவில்லை என்றால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்.

4/ 8

 ஒரு கேள்வி : நீங்கள் யாரிடமாவது கேள்வி கேட்டிருந்தால், அவர்களின் பதிலைக் கேட்க பொறுமையாக காத்திருக்க வேண்டும். அந்த நபர் கேள்விக்கு பதிலளித்தால் நல்லது. அப்படி இல்லையென்றால் உடனே மற்றவர்களை கவனிக்க ஆரம்பித்து விடுங்கள். இதன் மூலம் தேவையில்லாத வீண் பேச்சுக்களை தவிர்க்கலாம். உங்களது கேள்விக்கு பதிலளிக்கவில்லை என நீங்கள் கோப்படுவதால் எந்த பலனும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

5/ 8

 மௌனமே சிறந்தது : நாம் அருகில் இருக்கும் நபர் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் நமக்கு தெரிந்திருக்க வேண்டியதில்லை. உங்கள் நண்பர்கள் உங்களுக்கு சில விஷயங்கள் தெரியவில்லை என கிண்டல் செய்தால் அமைதியாக இருப்பது நல்லது. மேலும் சில நேரங்களில் நம்முடைய பேச்சுக்கு மதிப்பு இல்லை எனும் போது , நாம் அமைதியாக இருப்பதே நல்லது. இதனால் தேவையில்லாத பிரச்சனைகள், மன கசப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

6/ 8

 அவதூறு சுமத்தும் போது : மற்றவர்கள் எது சொன்னாலும் நீங்கள் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் நம் மீதான கோபமோ அல்லது வன்மத்திலோ பேசினால், அவற்றுக்கு யோசித்து பதில் அளிப்பது நல்லது ஆகும். ஒருவேளை இது பற்றி பேசினால் பிரச்சினை ஆகும் என்று நீங்கள் நினைத்தால் அமைதியாக கடந்து விடுங்கள். குறிப்பாக நீங்கள் செய்யாத தவறுக்கு உங்களை குற்றம் சாட்டினால் நீங்கள் அங்கிருந்து சென்று விடுங்கள். விளக்கம் அளிக்கிறேன் என சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

7/ 8

 எல்லாம் எனக்கு தெரியும் : சில நேரங்களில் பேசப்படும் விஷயம் பற்றி முழுதாக தெரிந்து இருந்தாலும், வாயை மூடிக் கொள்வது நல்லதாகும். ஆர்வக்கோளாராக நாம் சொல்லும் விஷயங்கள் பல சமயங்களில் தவறாக புரிந்துக் கொள்ளப்படும். இதனால் எல்லாம் எனக்கு தெரியும் என மற்றவர்கள் முன்னிலையில் கூறுவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

8/ 8

 எச்சரிக்கை வேண்டாம் : உதாரணமாக உங்கள் நண்பர்கள் குழுவில் யாரையாவது ஒருவரை ஒரு தவறான செயலுக்கு நீங்கள் எச்சரித்து இருக்கிறீர்கள். மீண்டும் அந்த நபர் அந்த செயலை செய்தார் என்றால் நீங்கள் மீண்டும் அவரை எச்சரிக்க வேண்டிய அவசியமில்லை. தேவையில்லாத அந்த பிரச்சினையை மனதில் வைத்து குழப்பிக்கொள்ளக்கூடாது. அமைதியாக கடந்து விட வேண்டும். இவ்வாறு நாம் பல்வேறு இடங்களில் தேவைக்கேற்ப மட்டுமே பேசினால், வீண் பிரச்சினைகள் வருவதை தடுக்கலாம்.